திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்- கவிஞர் வைரமுத்து கோரிக்கை
உலகம் போற்றும் திருக்குறள் ஒரு புகழ்பெற்ற தமிழ் நூல் ஆகும்.
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது, ஏனென்றால் இதன் கருத்துக்கள் எல்லா காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் பொருந்தும்.
இந்நிலையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
வெளியிட்ட பதிவு..,
மாண்புமிகு
— வைரமுத்து (@Vairamuthu) August 2, 2025
இந்தியப் பிரதமர் அவர்களே!
தங்களின்
விடுதலைத் திருநாள் பேருரைக்கு
மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த
தங்கள் மாண்புக்கு
என் ஜனநாயக வணக்கம்
தமிழ்நாட்டிலிருந்து
ஓர் இந்தியனாக எழுதுகிறேன்
தாங்கள்
காலமெல்லாம் போற்றிவரும்
திருக்குறள்
இனம் மொழி மதம் நாடுகடந்த
உலகத்தின்… pic.twitter.com/tv0J91EbwW
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |