இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? இதயம் பதறுகிறது: குமரி அனந்தன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக வயது மூப்பினால் உடல்நிலை குன்றிய குமரி அனந்தன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார்.
அவர் தனது பதிவில், "இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது.
அரசியல்வாதிகளுக்குள் ஓர் இலக்கியவாதி; இலக்கியவாதிகளுக்குள் ஓர் அரசியல்வாதி. தமிழுக்காக ஒன்றிய அரசிடம் ஓயாமல் போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன்.
போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல், பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர் சொல்லும். நடைப் பயணங்களால் நாடு சுற்றிய நாயகன், கண்மூடிக்கொண்டு கேட்டால் அவர்பேச்சு உரைநடைச் சங்கீதமாய் ஒலிக்கும், ஒரு தமிழாளன் தவறிவிட்டான்.
தளராத கொள்கையாளன் தவறிவிட்டான் என்று சோகம் கப்புகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அனந்தன் என்றால் முடிவற்றவன்; அனந்தனும் முடிவற்றவர்தான் தமிழிலும் புகழிலும்" என தெரிவித்துள்ளார்.
இலக்கியச் செல்வர்
— வைரமுத்து (@Vairamuthu) April 9, 2025
இறந்துவிட்டாரா?
தகைசால் தமிழர்
தவறிவிட்டாரா?
இதயம் பதறுகிறது
அரசியல்வாதிகளுக்குள்
ஓர் இலக்கியவாதி
இலக்கியவாதிகளுக்குள்
ஓர் அரசியல்வாதி
தமிழுக்காக
ஒன்றிய அரசிடம்
ஓயாமல் போராடிய
உரிமைவீரர் குமரி அனந்தன்
போதிமரம் புத்தனுக்குப்
பேர் சொன்னதுபோல்
பனைமரம்
குமரி… pic.twitter.com/xSDB4Bm3zv
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |