இரும்புக் கம்பிகள் இளமையை தின்ற பிறகு வெளியே வருகிறான்! பேரறிவாளன் விடுதலை குறித்து வைரமுத்துவின் பதிவு
30 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டத்திற்கு பின் விடுதலையாகியுள்ள பேரறிவாளனை வரவிற்கும் விதமாக கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதலை தீர்ப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான். தமிழ்நாட்டு அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் வணக்கம். பேரறிவாளனுக்குத் திறந்த அதே வாசல் வழியே சம்பந்தப்பட்ட ஏனையோரும் வெளிவருமாறு, வெளிவர வேண்டும். நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு' என தெரிவித்துள்ளார்.
இரும்புக் கம்பிகள்
— வைரமுத்து (@Vairamuthu) May 18, 2022
இளமையைத் தின்று தீர்த்தபிறகு
ஒரு மனிதன் வெளியே வருகிறான்
தமிழ்நாட்டு அரசுக்கும்
உச்ச நீதிமன்றத்திற்கும்
வணக்கம்
பேரறிவாளனுக்குத் திறந்த
அதே வாசல் வழியே
சம்பந்தப்பட்ட ஏனையோரும்
வெளிவருமாறு
வெளிவர வேண்டும்
நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு#PerarivalanRelease