உலகத் தமிழ் உள்ளங்களே நாளை அறிவிக்கிறேன் - கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதி முடித்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.
திருக்குறள்
உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் தமிழின் தொன்மையான நூல் 'திருக்குறள்'.
உலகளவில் பைபிளுக்கு அடுத்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இந்த நூலிற்கு தமிழில் பலர் விளக்க உரை எழுதியுள்ளனர்.
அந்த வகையில் பிரபல கவிஞர் வைரமுத்துவும் விளக்க உரை எழுதியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உலகத் தமிழ் உள்ளங்களே வணக்கம். திருக்குறள் நிறைந்துவிட்டது; முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன். ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன்; கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது.
ஈராயிரம் ஆண்டை இருபது வயதிற்கு எடுத்துச் செல்வது; அறமும், பொருளும் ஞானப் பொருளாகவும், இன்பம் கவிதைப் பொருளாகவும் உரை செய்யப்பட்டிருப்பது பிறந்த பெருங்கடமைகளுள் ஒன்று. நிறைவுற்றதாய் நெஞ்சமைதி கொள்கிறேன்.
நூலின் தலைப்பை நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு இதே தளத்தில் அறிவிக்கிறேன். நீங்கள் என்மீது வீசும் ஒவ்வொரு பூவிலும் குருதி சிலிர்க்கும்; உறுதி பிறக்கும். திருக்குறளை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வோம் வாழ்க வள்ளுவம்; வெல்க குறள்' என தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் உள்ளங்களே!
— வைரமுத்து (@Vairamuthu) May 21, 2025
வணக்கம்
திருக்குறள்
நிறைந்துவிட்டது;
முப்பாலுக்கும்
உரையெழுதி முடித்திருக்கிறேன்
ஏழு முறை
செப்பனிட்டுவிட்டேன்
கணினித் தலைமுறைக்கான
கனித்தமிழ் இது
ஈராயிரம் ஆண்டை
இருபது வயதுக்கு
எடுத்துச் செல்வது
அறமும் பொருளும்
ஞானப் பொருளாகவும்
இன்பம்
கவிதைப்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |