அவர் மீண்டு வருவார், கலையுலகை ஆண்டு வருவார்! கவிஞர் வைரமுத்து
பிரபல இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாரதிராஜா மீண்டு வருவார் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்
மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டதால் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு அவர் மருத்துவமனையில் இருப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில் பாரதிராஜா மீண்டு வருவார் என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், 'பாரதிராஜா மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள்.
அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார், கலையுலகை ஆண்டு வருவார்' என தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா
— வைரமுத்து (@Vairamuthu) August 24, 2022
மருத்துவமனையில்
பாரதிராஜாவைப் பார்த்தேன்
நலிந்த நிலையிலும்
நகைச்சுவை தீரவில்லை
சின்னச் சின்னப்
பின்னடைவுகளைச் சீர்செய்ய
சுத்த மருத்துவர்கள்
சூழ நிற்கிறார்கள்
அல்லி நகரத்தை
டில்லி நகரத்திற்கு
அழைத்துச் சென்ற
மகா கலைஞன்
விரைவில்
மீண்டு வருவார்
கலையுலகை
ஆண்டு வருவார்