டிரம்ப், நெதன்யாகுவிற்கு இந்திய ரோஜாக்கள் பரிசு: பாலஸ்தீனம் தனி நாடாகட்டும் - வைரமுத்து
போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும் என்று பாலஸ்தீனம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
அமைதி ஒப்பந்தம்
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து அளிப்பதாக முக்கிய நாடுகள் சமீபத்தில் அறிவித்தன.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஹமாஸ் படைகள் அமைதி ஒப்பந்தத்திற்கு தயார் என்பதை தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து காசா மற்றும் இஸ்ரேல் இருதரப்பிலும் பிணைக்கைதிகள் மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாதையைத் திறந்துவிடுங்கள்
அவர் தனது எக்ஸ்தள பதிவில், "67 ஆயிரம் உயிர்களைக் காவுகொண்ட பின் இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் முடிவுக்கு வருவதாய்த் தோன்றுகிறது. பாலஸ்தீனத்திற்கே கூடுதல் இழப்புகள் என்பதால் இஸ்ரேலின் விட்டுக்கொடுத்தல்களை உலகம் வேண்டுகிறது.
காசாவின் பிணைக் கைதிகளும், இஸ்ரேலின் சிறைக் கைதிகளும் காதலர்கள் பூக்களைப் பரிமாறிக் கொள்வதைப் போல மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும். முதலில் பாலஸ்தீனத்திற்கு உணவுப் பாதையைத் திறந்துவிடுங்கள்.
எலும்புக் கூடுகளுக்குள் உயிர் ஊறட்டும், கூடாரங்கள் மெல்ல மெல்லக் குடில்களாகட்டும். போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும். சமாதானத்தை முன்னெடுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவருக்கும் இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்.
உலக நாடுகள் பல ஒப்புக்கொண்ட வண்ணம் பாலஸ்தீனம் தனி நாடாகட்டும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே; விடியும் பூமி அமைதிக்காக விடிகவே" என தெரிவித்துள்ளார்.
67 ஆயிரம் உயிர்களைக்
— வைரமுத்து (@Vairamuthu) October 5, 2025
காவுகொண்ட பின்
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்
முடிவுக்கு வருவதாய்த்
தோன்றுகிறது
பாலஸ்தீனத்திற்கே
கூடுதல் இழப்புகள் என்பதால்
இஸ்ரேலின்
விட்டுக்கொடுத்தல்களை
உலகம் வேண்டுகிறது
காசாவின் பிணைக் கைதிகளும்
இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்
காதலர்கள் பூக்களைப்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |