உலகத் தமிழர்கள் உற்றுப் பார்க்கும் வெற்றி! தவெக தலைவர் விஜய்க்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெற்றி
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

கட்சியின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் (திருச்சி கிழக்கு, பெரம்பூர்) வெற்றி பெற்றார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகம் உங்களிடம் எதிர்பார்க்கிறது
அவரது பதிவில், "வெற்றி பெற்ற விஜய் அவர்களே! கலை உலகின் சகபயணி என்ற முறையில் உங்களை வாழ்த்துகிறேன். உலகத் தமிழர்கள் உற்றுப் பார்க்கும் வெற்றி உங்களுடையது. வெற்றி - தோல்வி இரண்டுமே பாரங்கள்.
தோல்வி என்பது முதுகில் சுமக்கும் பாரம்; வெற்றி என்பது தலையில் சுமக்கும் பாரம். சமூகம் உங்களிடம் எதிர்பார்க்கிறது; மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் முன்பே மக்களுக்கு நீங்கள் வாக்களித்து விட்டீர்கள்.
அந்த வாக்குகளை நிறைவேற்றுவதில் இருக்கிறது உங்கள் ஆட்சியின் மாட்சி. உங்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
வெற்றி பெற்ற
— வைரமுத்து (@Vairamuthu) May 5, 2026
விஜய் அவர்களே!
கலை உலகின்
சகபயணி என்ற முறையில்
உங்களை வாழ்த்துகிறேன்
உலகத் தமிழர்கள்
உற்றுப் பார்க்கும் வெற்றி
உங்களுடையது
வெற்றி - தோல்வி
இரண்டுமே பாரங்கள்
தோல்வி என்பது
முதுகில் சுமக்கும் பாரம்;
வெற்றி என்பது
தலையில் சுமக்கும் பாரம்
சமூகம்
உங்களிடம்…

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |