ஊசியில் நூல் நுழையும், ஒட்டகம் நுழையாது.. இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு வைரமுத்துவின் பதிலடி!
ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பதிவுகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு கவிஞர் வைரமுத்து பதிலடி கொடுத்துள்ளார்.
புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து பதிவுகளிலும் தற்போது இந்தி கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழி என்ற சர்ச்சை நிலவி வரும் சூழலில், இந்த உத்தரவிற்கு பலத்த கண்டங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,
'கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம். இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம்; திணிப்போரை ரசிக்கமாட்டோம். ஒருமைப்பாடு சிறுமைப்படாதிருக்க நாட்டின் பன்மைக்கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். சிலர் நுழைக்கப்பார்ப்பது ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது' என தெரிவித்துள்ளார்.
கடைசியில் இந்தி
— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2022
ஜிப்மர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது;
வருந்துகிறோம்
இந்தி படிப்போரை
வெறுக்கமாட்டோம்;
திணிப்போரை
ரசிக்கமாட்டோம்
ஒருமைப்பாடு
சிறுமைப்படாதிருக்க
நாட்டின் பன்மைக்கலாசாரம்
பாதுகாக்கப்படவேண்டும்
சிலர்
நுழைக்கப்பார்ப்பது
ஊசியில் நூலன்று;
ஒட்டகம்
நுழையாது