ODI-யில் முதல் 5 விக்கெட்டை வீழ்த்திய வைஷ்ணவி: 131 ஓட்டங்களுக்கு சுருண்ட ஜிம்பாப்வே
Vaishnavi sharma maiden fifer vs zimbabwe: இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணி 131 ஓட்டங்களுக்கு சுருண்டது.
வதோதராவில் நடந்து வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீராங்கனை வைஷ்ணவி ஷர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்ற, ஜிம்பாப்வே அணி 131 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்து வருகிறது.

முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் லோர்ன் பிரி டக்அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து திரிபானோ 4 ஓட்டங்களிலும், பிசா ஒரு ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
நிதானமாக ஓட்டங்களைச் சேர்த்த மோடெஸ்டர் முபசிக்வா 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வைஷ்ணவி ஷர்மாவின் (Vaishnavi Sharma) பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
வைஷ்ணவி அபாரம்
துருருவை 20 ஓட்டங்களிலும், மவுங்காவை 6 ஓட்டங்களிலும் வைஷ்ணவி வெளியேற்ற, அணித்தலைவர் ஜோஸ்பின் நிகோமோ 35 (67) ஓட்டங்களில் கிராந்தி கவுட் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
யாஷாவின் (10) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 5 விக்கெட்டை வைஷ்ணவி பதிவு செய்தார்.
கடைசி விக்கெட்டாக நோம்வெலோ சிபந்தா ரன்அவுட் ஆக, ஜிம்பாப்வே அணி 39.5 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. வைஷ்ணவி ஷர்மா 5 விக்கெட்டுகளும், கிராந்தி கவுட் மற்றும் சாயலி சத்காரே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
