பெண்ணிற்கு 7ஆம் மாதத்தில் வளைக்காப்பு செய்வது ஏன்?
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வில் ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொரு சடங்குகள் நடந்துக்கொண்டே தான் இருகின்றது.
பிறப்பு முதல் இறப்பு வரை 41 முக்கியமான சடங்குகளை செய்ய வேண்டும் என நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
அதில் ஒன்றாக இருப்பது தான் "வளைகாப்பு". அடுத்த சந்ததியை கருவில் சுமக்கும் பெண்ணிற்கு தான் இந்த சடங்கானது செய்யப்படும்.
"வளைகாப்பு"
ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் உறவினர்கள் சேர்ந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வார்கள்.
கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பற்றிய பயங்கள் மனஅழுத்தங்கள் நீங்கி அவர்களுக்கு மிகுந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கிடைப்பதற்காக இது காலங்காலமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும். பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற கவலையும் பயமும் இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.
இதன் பின்னணியில் பல நன்மைகள் இருக்கின்றன. அவை குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.
எப்படி செய்வது?
கருவுற்ற பெண்ணுக்கு தாய்மார்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து கணணாடி வளையல்களை அணிவித்து ஆரத்தி எடுப்பார்கள்.
பெண்ணின் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வளையங்கள் நிரம்பி இருக்கும். சீமந்தம் முடிந்தவுடன் தாய் வீடிற்கு அழைத்து செல்வார்கள்.
கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையால் நன்றாக கேட்க முடியும்.
அந்த சத்தம் தாயையும், சேயையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும். மேலும் ஏழாம் மாதத்தற்கு மேல் தம்பதிகளுக்கிடையே தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். அதற்காகவே எளிதில் உடையக்கூடிய கண்ணாடி வளையல்களை அணிவிப்பார்கள்.
கர்ப்பமாக இருக்கும் பெண் தாயின் அருகில் இருப்பதை பாதுகாப்பாக உணர்வார்கள். எனவே முதல் பிரசவத்தை தாய் வீட்டில் வைப்பது வழக்கமாக உள்ளது.
7 வகையான வளைகாப்பு சாதம்
-
சர்க்கரை பொங்கல்
-
புளிசாதம்
- எலுமிச்சை சாதம்
- தயிர் சாதம்
-
மரக்கறி பிரியாணி
- சாம்பார் சாதம்
- தேங்காய் சாதம்
வளைகாப்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
-
இரண்டு குத்து விளக்கு
-
நறுமணம் உள்ள மலர்கள்
- பழ வகைகள்
- இனிப்புகள்
- மஞ்சள் மற்றும் குங்குமம்
- கண்ணாடி
- வளையல்
- 7வகை சாதம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |