இந்த கீரையை சாப்பிட்டால் ரத்தத்தில் உப்பின் அளவு சீக்கிரமாக குறையும்! பல நன்மைகள்
வல்லாரைக் கீரை உண்பது பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சனையை சரி செய்வதற்கு வழி செய்கிறது.
இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
இந்தக் கீரையை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் உப்பின் அளவை குறைக்கும்.
மேலும் உடம்பில் யூரிக் அமிலம் அதிகரிப்பை கட்டுப்படுத்தும்.
உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.
வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும்.