தாலிகட்டிய கணவனால் கைவிடப்பட்ட சிம்பு பட நடிகை! சிரமப்பட்டு டாக்ஸி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றும் பரிதாபம்
நடிகர் சிம்புவுடன் வல்லவன் திரைப்படத்தில் நடித்த நடிகை லட்சுமி, கணவனால் கைவிடப்பட்டு வாடகை கார் ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்த தகவலை நகைச்சுவை நடிகர் சுகுமார் வெளியிட்டுள்ளார். சிம்பு, நயன்தாரா, ரீமாசென். உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வல்லவன்' மற்றும் இன்னும் சில படங்களில் நடித்த துணை நடிகை லட்சுமி என்பவரை பற்றி மிகவும் உருக்கமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் காதல் சுகுமார்.
அதில், வல்லவனில், ஸ்கூல் போர்ஸனில் நகைச்சுவை காட்சி ஒன்றில் சந்தானம் பேப்பரை தூக்கி எறிய அதை எடுக்கும் மாணவி "என்னா வெறும் பேப்பரை தூக்கி எறியுற.. எதாச்சும் எழுதிக்குடு" என்று அதகளம் பண்ணியிருக்கும்.
சமீபத்தில் நான் கதை நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் ஒரு காட்சியில் நடிக்க கொடைக்கானல் வந்திருந்தாள். எனக்கு அடையாளமே தெரியவில்லை. இன்னும் நடிப்பில் பட்டைய கெளப்பும் அவளுக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமையாமல் காதல் கல்யாணம் பண்ணியவளுக்கு இரண்டு பிள்ளைகள்..
இப்போது கணவனால் கைவிடப்பட.. ஓலா டாக்ஸி ஓட்டி இப்போது குடும்பத்தை காப்பாற்றுகிறாள். எல்லா கார்களையும் அனாசயமாக ஓட்டுகிறாள். முடிந்தவரை சினிமாவில் வாய்ப்புகள் இருந்தால் சொல்வதாக சொல்லியிருக்கிறேன். வாய்ப்புகள் அமையட்டும் லக்ஷ்மி என பதிவிட்டுள்ளார்.