வாழ்நாள் கனவு... எவரெஸ்ட் மலை சிகரத்தில் கனேடியருக்கு ஏற்பட்ட துயரம்
எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஒருமுறையேனும் கால் பதிக்க வேண்டும் என கனவு கண்டிருந்த கனேடியர் ஒருவர், அந்த சிகரத்திலேயே துயரத்தை எதிர்கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முகாம் IV க்கு கீழே இறங்கும் போது மரணம்
கனடாவின் வான்கூவர் பகுதியை சேர்ந்த 63 வயதான Pieter Swart என்பவரே முகாம் IV க்கு கீழே இறங்கும் போது மரணமடைந்தவர்.
Credit: Instagram
முகாம் IV என்பது சிகரத்தின் உச்சிக்கு செல்லும் முன்னர் கடைசி ஓய்வெடுக்கும் பகுதியாகும். திடீரென்று ஏற்பட்ட சுவாச பிரச்சனை காரணமாக அவதிப்பட்ட Pieter Swart, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மயக்கவியல் துறை தலைவரும் குறித்த தகவலை உறுதி செய்துள்ளார். தொடர்புடைய துறையில் ஸ்வார்ட் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,000 மீற்றர் உயரத்தில் இருக்கும் போது ஸ்வார்ட் வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். பொதுவாக மலையேறும் வீரர்கள் இப்பகுதியை இறப்பு மண்டலம் என்றே அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.
Credit: Instagram
இப்பகுதி இறப்பு மண்டலமாக
இந்த உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலையே மலையேறும் வீரர்களால் இப்பகுதி இறப்பு மண்டலமாக குறிப்பிடப்பட்டு வருகிறது. எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஒருமுறையேனும் கால் பதிக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்து வந்தது என கூறும் சக ஊழியர்கள், 19 ஆண்டுகள் அவர் மருத்துவராகவும் பணியாற்றியதை குறிப்பிட்டுள்ளனர்.
நேபாள ஊடகங்களின் தகவலின்படி, இது எவரெஸ்ட் சிகரத்தில் இந்த பருவத்தில் 12 வது மரணம் என குறிப்பிட்டுள்ளனர்.