கனடாவில் ஆசிய மாணவரின் துணிச்சல்... பின்னர் எதிர்பாராமல் கிடைத்த உதவி
கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்று கத்தியால் தாக்கப்பட்ட ஆசிய மாணவரின் மருத்துவ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அவருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கத்தியால் தாக்கப்பட்டு காயம்
கனடாவுக்கு புதியவரான Meraj Ahmed என்ற மாணவர் DoorDash உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மெராஜ் அகமது மற்றும் சக ஊழியர் ஒருவரும் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.
Sheldon Ilbegi-Asli என்பவர் கொள்ளையில் ஈடுபட, இந்த இருவரும் அந்த நபரை தடுக்க சென்ற நிலையில், இவர்களை அந்த நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மெராஜ் அகமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரது மருத்துவ செலவு 2000 டொலரை எட்டியது.
ஆனால் அவரது பொருளாதார சூழல் மற்றும் மாணவர் என்பதால் அந்த தொகையை செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டது. சம்பவத்திற்கு பிறகு மூன்று மாத காலம் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர் David Eby இடம் இந்த விவகாரம் தொடர்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து Vancouver Coastal Health நிர்வாகம் கட்டணம் செலுத்த தேவையில்லை என அகமதுவுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
காசோலை அனுப்பி வைத்து உதவி
இது தமக்கு பெரும் உதவி மற்றும் நிம்மதியாக உள்ளது என்றே அகமது தெரிவித்துள்ளார். ஆனால் சுகாதார அமைச்சரும் அகமது விவகாரத்தில் சாதகமான முடிவெடுக்கும் என்றே தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கனேடிய மக்கள் பலர் முன்வந்து, அகமதுவின் மருத்துவ செலவை ஏற்க மாகாண நிர்வாகம் தவறினால் தாங்கள் தயார் எனவும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், பெயர் குறிப்பிடாத ஒருவர் 2,000 டொலருக்கான காசோலையை அனுப்பி வைத்து உதவியுள்ளார்.
இக்கட்டான சூழலில் தமக்கு உதவ முன்வந்தவர்கள் மற்றும் உதவியவர்களுக்கு அகமது நன்றி தெரிவித்துள்ளார். வங்கதேச நாட்டவரான அகமது சமீபத்தில் தான் கனடாவுக்கு வந்துள்ளார். பல்கலை படிப்புடன் வேலையும் பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |