கனேடிய கிளப் அணி கோல் மழை! 5-0 என மிரட்டல் வெற்றி
MLS போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் டல்லஸ் அணியை வீழ்த்தியது.
BC Place மைதானத்தில் நடந்த MLS கால்பந்து போட்டியில், டல்லஸ் அணியை 5-0 என்ற கணக்கில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் வீழ்த்தியது.
MLS கால்பந்து போட்டி
வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் டல்லஸ் அணிகளுக்கு இடையிலான MLS கால்பந்து போட்டி BC Place மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்திலேயே வான்கூவர் அணி வீரர் இமானுவல் செப்பி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து சக அணி வீரர் பிரையன் ஒயிட் 23 மற்றும் 37 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.
வான்கூவர் வெற்றி
பின்னர் 45+6வது நிமிடத்தில் வான்கூவர் வீரர் எடியர் ஓகாம்போ கோல் அடித்தார். அடுத்து 68வது நிமிடத்தில் புருனோ கெய்சிடோ (Bruno Caicedo) கோல் அடித்தார்.
இறுதிவரை டல்லஸ் அணியால் கோல் அடிக்க முடியாததால், வான்கூவர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |