நொடிப் பொழுதில் எதிரணியை திசைதிருப்பி முல்லர் கோல்: கிண்ணத்தை வென்ற வான்கூவர்
Vancouver Whitecaps FC win Cascadia Title: MLS கால்பந்து போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் சியாட்டில் சௌண்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
லூமென் ஃபீல்ட் மைதானத்தில் நடந்த MLS கால்பந்து போட்டியில், எல்லோமி மற்றும் முல்லர் கோல்கள் அடிக்க வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் சியாட்டில் சௌண்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
வான்கூவர் ஒயிட்கேப்ஸ்
வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் சியாட்டில் சௌண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான MLS கால்பந்து போட்டி லூமென் ஃபீல்ட் மைதானத்தில் நடந்தது.
முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில், 77வது நிமிடத்தில் வான்கூவர் அணிக்கு முதல் கோல் கிடைத்தது.
இமானுவல் சேபி கடத்திய பந்தை, ரயன் எல்லோமி (Rayan Elloumi) மிரட்டலாக கிக் செய்து கோலாக மாற்றினார்.
தாமஸ் முல்லர்
அதனைத் தொடர்ந்து, 81வது நிமிடத்தில் வான்கூவர் அணிக்கு பெனால்டி கட்டத்திற்குள்ளேயே Free Kick வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜேர்மனியின் தாமஸ் முல்லர் (Thomas Muller), நொடிப்பொழுதில் எதிரணி வீரர்களின் கவனத்தை திசைதிருப்பி பந்தை கிக் செய்ய, அது வலது கம்பத்தில் பட்டு திரும்பி கோல் ஆனது.
அதன் பின்னர் சியாட்டில் அணி கோல் அடிக்காததால், வான்கூவர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 9வது முறையாக Cascadia கிண்ணப் பட்டத்தை வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி கைப்பற்றியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |