ஒலிம்பிக் போட்டியை நிறுத்த எடுக்கப்படும் சதி; தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கம்
பிரான்ஸைச் சுற்றியுள்ள நகரங்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான நிகழ்வுகளை நடத்துவதால், பல தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்
2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 26 ஆம் திகதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. குறித்த தொடரில் சுமார் 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஊர்வலமாக 600 படகில் அழைத்து சென்றனர்.
அதற்கு முன் அந்நாட்டின் முக்கிய நகரத்தை இணைக்கும் பிரதான ரயில் சேவைகளின் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டு தீ வைக்கப்பட்டது.
குறித்த சம்பவமானது திட்டமிடப்பட்டு மர்ம நபர்களால் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தால் பல ரயில் வழித்தடங்கள் மூடப்பட்டன. இதனால் சுமாதர் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
அதையடுத்து சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, அனைத்து போக்குவரதை்து சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பின.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனால் அனைத்து தொலைப்பேசி சேவைகளும் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி கூறுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனால் ஒலிம்பிக் தொடருக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என பல நாடுகளிடையில் கேள்வி எழுந்துள்ளது.
மேற்கு பிரான்சின் Seine-Maritime பகுதியில் உள்ள புகையிர நிலையத்தில் ஒரு தீவிர இடதுசாரி செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் தீவைப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |