வந்தாறுமூலை மகா விஸ்ணு ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம் (Video)
கிழக்கிலங்கையில் திருப்பதியாக விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு தேவஸ்தான வருடாந்த உற்சவ திருவிழா நேற்று புதன்கிழமை (21.06.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 12 நாள் திருவிழா இடம்பெற்று எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழாவும் 3ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடய உள்ளது.
இந்த கொடியேற்ற உற்சவ விழா வவுனியா கற்குழி பிரமேற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ குக.அரவிந்த குருக்கள் தலைமையில் ஆலய பிரதம குருவான யாழ்ப்பாணம் வழக்கம்பரை சிவஸ்ரீ சாட்சிநாதக் தெய்வேந்திர குருக்கல் மற்றும் உதவி குருக்கள் பிரம்மஸ்ரீ கிருபாசர்மா, பிரம்மஸ்ரீ கோபிசர்மா, பிரம்மஸ்ரீ நவநீபசாமா உட்பட்ட குருமார் கலந்துகொண்டு விநாயகர் வழிபாட்டுடன் கிரிகைகள் ஆரம்பித்து கொடியேற்றம் இடம்பெற்றது.
மேலும், இக்கொடியேற்றத்தில் நூற்றுக்கணக்கான பகத்த அடியார்கள் கலந்து கொண்டதுடன் பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |