வந்தே பாரத் சொகுசு ரயிலின் ஸ்லீப்பர் கோச்: வைரலாகும் புகைப்படங்கள்
வந்தே பாரத் சொகுசு ரயிலின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் இருக்கும் புகைப்படங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
ஸ்லீப்பர் கோச்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அண்மையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.
தற்போது வரை, இந்தியா முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் இருக்கை வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் புகைப்படங்கள்
பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, வந்தே பாரத் ரயிலில் இந்த வசதியை செயல்படுத்துவதற்கான முயற்சியை ரயில்வே துறை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வந்தே பாரத் தூங்கும் வசதி ரயிலின் முதல் பதிப்பு சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது, 857 படுக்கைகள் கொண்ட பதிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வந்தே பாரத் ரயிலின் கான்செப்ட் புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |