ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே வந்தே பாரத் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
இனி 15 நிமிடங்களுக்கு முன்பே IRCTC செயலி மூலம் வந்தே பாரத் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ரயில்வே அறிவிப்பு
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால், தொலை தூரங்களுக்கு பயணம் செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால், பயணிகள் இனி 15 நிமிடங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியை வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டும் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, வந்தே பாரத் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே IRCTC app மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இடைநிலை நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்த வசதியானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கிடைக்கிறது.
அதாவது, தெற்கு ரயில்வே மண்டலத்தின் 8 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமே கிடைக்கிறது. வரும் காலங்களில், நாடு முழுவதும் உள்ள பிற வந்தே பாரத் ரயில்களில் செயல்படுத்தப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |