4 புதிய வந்தே பாரத் ரயில் சேவை., பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
4 புதிய வந்தே பாரத் ரயில் சேவை
நமது நாட்டில் வந்தே பாரத் ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுக்க வந்தே பாரத் ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது மேலும் 4 புதிய வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 4 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை இன்று காலையில் தொடங்கி வைத்தார்.
இதில் எர்ணாகுளம் - பெங்களூரு, பிரோஸ்பூர் - டில்லி, லக்னோ - ஷஹாரான்பூர், பனாரஸ் - கஜூராஹோ நகரங்களுக்கு இடையே புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் இணைப்பை மேம்படுத்துவதோடு மக்களுக்கு அதிக வசதியை வழங்கும் என்று கூறினார்.
மேலும், வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள், இந்திய ரயில்வேயின் புதிய தலைமுறைக்கான அடித்தளத்தை அமைத்து வருகின்றன என்று தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |