32 வயதில் சர்வதேச டெஸ்டில் களமிறங்கிய இலங்கை வீரர்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வான்டர்சே அறிமுகமாகியுள்ளார்.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு போட்டிகளும் காலேவின் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன.
இன்று தொடங்கிய முதல் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டைத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வான்டர்சே அறிமுகமாகியுள்ளார். அவருக்கு தொப்பி அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
PC: Ishara S.Kodikara/AFP/Getty Images
32 வயதாகும் வான்டர்சே 19 ஒருநாள் போட்டிகளிலும், 14 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
Test debut for Jeffrey Vandersay!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 29, 2022
He received his Test cap from Piyal Wijetunge! #SLvAUS pic.twitter.com/h7mU9tc5x8