வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாணி ஜெயராம்
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை வாணி ஜெயராம் பாடியுள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த வாணி ஜெயராம் நேற்று வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
வாணி ஜெயராமின் மரணம் இயற்கை மாறானதாகவும், மர்ம மரணம் எனவும் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியது.
பிரேத பரிசோதனை அறிக்கை
இந்த நிலையில் வாணி ஜெயராம் உடலுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கீழே விழுந்ததில் பலமாக தலையில் அடிபட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடயவியல் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை ஆய்வு அடிப்படையில், வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.