கனடாவில் கண்முன்னே மாயமாகும் ஓடை! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.. வைரல் வீடியோ
கனடாவில் உறைபனியில் இருந்து வெளிவரும் நீரானது திடீரென மாயமாகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கனடாவின் Squamish எனப்படும் பகுதியில் குறைந்த வெப்பநிலை காரணமாக நிலப்பரப்பு முழுவதும் பனி சூழ்ந்துள்ளது.
உறைபனி மீது வெளியேறும் ஓடை நீரானது சிறிது நேரத்தில் கானல் நீர் போல மாயமாகி விடும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 8 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
Squamish மற்றும் Vancouver ஆகிய பகுதிகளில் இதுவரை வரலாறு காணாத அளவில் குளிர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தி வெதர் நெட்வொர்க்கின் வானிலை ஆய்வாளர் Jessie Uppal கூறியதாவது, குறைந்த வெப்பநிலை காலத்தில் வீடியோவில் உள்ளது போன்ற சில அறிய நிகழ்வுகள் எப்போதாவது நடைபெறும் என்று கூறியுள்ளார்.
An example of rarely seen Frazil Ice from Shannon Falls in Squamish, BC yesterday morning. The stream disappears instantly before your eyes. @spann @JimCantore @stormchasernick @SeattleWXGuy pic.twitter.com/QmSbLIKNfC
— Brad Atchison (@Brad604) December 29, 2021
குறைந்த வெப்பநிலை மற்றும் வரலாறு காணாத பனி போன்றவை தான் ஓடை நீர் மறைய முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், பனிக்கு உள்ளே இருக்கும் நீர், கொந்தளிப்புடன் இருப்பதால் இவை அவ்வப்போது வெளிவருகின்றன.
அவ்வாறு வெளியில் வரும்போது குறைந்த வெப்பநிலை காரணமாக மீண்டும் பனியாக மாறிவிடுகிறது. இது தான் ஓடை நீர் மறைவது போன்று காட்சியளிக்க காரணம் என்று கூறுகிறார்.