அவர் என் கணவர் அல்ல! நடிகை வனிதா பரபரப்பு அறிக்கை
பீட்டர் பால் தனது கணவர் இல்லை என்றும், அவரை சட்டப்படி திருமணம் செய்யவில்லை என்றும் நடிகை வனிதா விஜயகுமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வனிதா மற்றும் பீட்டர் பால்
சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.
அவர்கள் இருவரும் கிறித்துவ முறைப்படியான திருமண உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.
பீட்டர் பால் மரணம்
இந்த நிலையில், பீட்டர் பால் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், வனிதா விஜயகுமார் எந்த வித பதிவையும் உடனடியாக வெளியிடாததால், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை நோக்கி கேள்வி எழுப்பினர்.
அவர் என் கணவர் அல்ல
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வனிதா விஜயகுமார் பகிர்ந்துள்ளார். அதில், 'நான் மிகவும் பொறுமையாக இருந்து, எதிர்வினையாற்றலாமா வேண்டாமா என்று யோசித்த பிறகு.. அனைத்து ஊடகம், பத்திரிகை மற்றும் செய்தி ஊடங்கங்கள் நினைவூட்டியதால் எனக்கு வேறு வழி இல்லை.
அனைத்து மரியாதைகளுடன் கூறுகிறேன், நான் மறைந்த பீட்டர் பாலுடன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, 2020யில் நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிந்தது. நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் இல்லை.
என் கணவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை பரப்புவதை நிறுத்துங்கள். நான் மிகவும் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன், கணவன் இல்லை, எந்த இழப்பிலும் நான் வருத்தப்படவில்லை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்' என தெரிவித்துள்ளார்.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) May 2, 2023