உருகி அழுத பின் வனிதா விஜயகுமாரின் பூஜை அறையில் நடந்த அமானுஷ்யம்! அவரே கூறிய விடயம்
தனது தாயிடம் உருகி அழுத பின்னர், பூஜை அறையில் அவரது கண்ணாடி திடீரென கிடைத்ததாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம் வெகுவிமர்சியாக நடந்தது. ஆனால் அவரது மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் அதனை கண்டுகொள்ளாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது போன்ற செயல்களில் வனிதா ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், தனது அம்மா இறந்த பின்னர் மிகவும் துன்பப்பட்டதாக கூறும் வனிதா, அவர்களை நினைத்து பலமுறை அழுத்துள்ளார். அச்சமயம் வீட்டில் வெள்ளை அடிக்கும் வேலை நடந்துள்ளது. வேலை முடிந்ததும் பூஜை அறையில் பார்த்தபோது கண்ணாடி ஒன்று இருந்துள்ளது. அது தனது தாய் பயன்படுத்திய விலைமிகுந்த கண்ணாடியாம்.
அதனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்ட வனிதா, தனது மகளிடம் கேட்டுள்ளார். எனக்கு தெரியாது என்று அவர் கூற, வீட்டில் உள்ள யாருக்குமே எப்படி அந்த கண்ணாடி வந்தது என்று தெரியவில்லை. இதனால் வனிதா குழப்பம் அடைந்துள்ளார்.
அப்போது தான் அந்த கண்ணாடி வேண்டும் என்று வனிதா தனது அம்மாவிடம் முன்பு ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்துள்ளது.
இதனால் அம்மா தனக்கு பரிசாக அதனை வைத்துள்ளார் என்று எண்ணி வனிதா மகிழ்ச்சியடைந்துள்ளார். அதை தற்போது பத்திரமாக வைத்திருப்பதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |