இது வனிதா மகனா....? கட்டுமஸ்தான உடம்பில் மாஸ் போஸ் கொடுத்த ஸ்ரீஹரி - வைரலாகும் புகைப்படம்
கட்டுமஸ்தான உடம்பில் வனிதா மகன் ஸ்ரீஹரி மாஸ் போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா
பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா. இவர் பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து, குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். அதே சேனலில் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் வந்தார்.
பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவரை விவகாரத்து செய்தார்.
இதன் பிறகு பிபி ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, நடுவரான ரம்யாகிருஷ்ணனிடம் ஏற்பட்ட சண்டையில் அந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வனிதா, 2கே காதல், காத்து, அநீதி உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு வனிதாவிற்கு முதல் கணவரான ஆகாஷிற்கும் பிறந்தவர் ஸ்ரீ ஹரி. இவரிடம் ஒரு நெட்டிசன் நீங்கள் வனிதா மகனா? என்று கேட்க, அதற்கு அவர் இல்லை நான் ஆகாஷ் பையன் என்று கூறினார். இதை கேட்ட வனிதா, என் மகன் வளர்ந்து விட்டான். ஆனால் அறிவே கிடையாது. அவன் உடலில் யார் ரத்தம் ஓடுகிறது எங்கள் குடும்பம் ரத்தம். அதனால்தான் அப்படி பேசுகிறான். நேரில் அவனைப் பார்த்தால் அப்படியே ஓங்கி அறைந்துடுவேன் என்று கடுமையாக விளாசி பதிவைப் போட்டார்.
இப்படி வனிதா பேசியது சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹீரோ மாதிரி மாறின ஆகாஷ்
இந்நிலையில், ஆகாஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் என்னப்பா... இவர் ஹீரோ மாதிரி ஆயிட்டாரு... அடுத்து படங்களில் இவர் நடிப்பார் போல... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.