என் வாழ்க்கையை கவனித்துக்கொள்ளும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன்! நான் பெருமைமிகு தாய்.. சீறிய நடிகை வனிதா விஜயகுமார்
மகள் வரைந்த ஸ்கெட்ச் புகைப்படத்தை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள நிலையில் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என கொந்தளித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை திருமணம் செய்து கொண்ட வனிதா நான்காவது முறையாக விமானி ஒருவரை மணந்தார் என ஒரு தகவல் சமீபத்தில் தீயாக பரவியது.
ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்து தான் சிங்கிளாக இருப்பதாக வனிதா தெரிவித்தார். மேலும் இந்த விடயம் தொடர்பாக பேசுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.
என் வாழ்க்கை யாருடைய பிரச்சினையும் இல்லை, இந்த உலகத்திலும் உங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவலைப்பட வேண்டிய விடயங்கள் அதிகம் உள்ளது.
Well said Media has to stop this shit..my life is nobody's problem.. why is this even a news or gossip.. there is so much to worry in this world today and your own lives.stop worrying about me people..I'm grown up enough to take care of my life..thanks for those who get it https://t.co/qfkHTuluvn
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 10, 2021
என்னைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்..நான் என் வாழ்க்கையை கவனித்துக்கொள்ளும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில் என் மகள் ஜோவிகா வரைந்த ஸ்கெட்ச் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள வனிதா தான் பெருமைமிகு தாய் என பதிவிட்டுள்ளார்.
A pen sketch by my jovika..#ProudMom pic.twitter.com/WzoWPGjYPw
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 10, 2021