ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #VanniyarsBoycottRajinikanth : ரஜினிகாந்த் 170 -க்கு எதிர்ப்பு
சமூக வலைதளமான ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ரஜினிக்கு எதிராக #VanniyarsBoycottRajinikanth என்னும் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ரஜினிகாந்த் 170
நடிகர் ரஜினிகாந்தின் 170 -வது திரைப்படத்தை இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்குகிறார். இதற்கு முன்பு ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, ஜெய்பீம் திரைப்படத்தில்,வில்லனின் இருப்பிடத்தில் இருக்கும் கேலண்டரில் வன்னியர்களின் அடையாளமாகத் திகழும் அக்னி கலசத்தை வைத்து, கொடூர மனம் படைத்தவர்கள் வன்னியர்கள் என சித்தரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால், டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ரஜினிகாந்துக்கு எதிராக ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
#VanniyarsBoycottRajinikanth
இந்நிலையில், ரஜினிகாந்தை புறக்கணிக்கும் விதமாக #VanniyarsBoycottRajinikanth என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அதாவது, இதற்கு என்ன அர்த்தம் என்றால் ரஜினிகாந்த், ஞானவேல் மற்றும் லைகாவை வன்னியர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதாகும். இதில், குறிப்பாக லைகாவில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரியும் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் என்பவர் பாமக ஜி.கே.மணியின் மகனாவார்.
முன்னதாக, ரஜினிகாந்துக்கும், பாமகவுக்கும் ஏற்கனவே பழைய பிரச்னை ஒன்று இருக்கிறது. பாபா திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இருந்ததால், அதனை நீக்குமாறு கூறி, திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |