பட்டா மாற்ற ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட VAO: மறைந்திருந்து அதிகாரிகள் செய்த செயல்
தமிழக மாவட்டம் திருவாரூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம் கேட்ட VAO
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிருஷ்ணகோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (65). இவர், அவருடைய சகோதரர் மாசிலாமணியிடம் இருந்து 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
இதனால், அந்த நிலத்திற்கு பட்டா மாறுதல் கோரி பெருமாளகரம் கிராம நிர்வாக பெண் அலுவலர் சுதா (42) என்பவரிடம் மதியழகன் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், பட்டா மாறுதல் பெறுவதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று மதியழகனிடம் சுதா கூறியுள்ளார்.
கைது செய்த அதிகாரிகள்
இதனால், கிராம நிர்வாக அலுவலர் சுதா குறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பொலிசாரிடம் மதியழகன் புகார் அளித்துள்ளார்.
அப்போது, லஞ்ச ஒழிப்பு துறையினர் வழங்கிய ஆலோசனைப்படி ரசாயணம் தடவிய ரூ.6 ஆயிரத்தை மதியழகன் சுதாவிடம் வழங்கினார். இதனையடுத்து, பணத்தை வாங்கிய சுதாவை மறைந்திருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு பொலிசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
தற்போது, லஞ்சம் தொடர்பாக சுதாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |