தித்திக்கும் சுவையில் வரகு அரிசி உக்காரை.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த உக்காரையை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் வரகு அரிசி வைத்து உக்காரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வரகு- 100g
- பாசிப்பருப்பு- 100g
- வெல்லம்- 150g
- நெய்- 50g
- முந்திரி - 10
- தேங்காய் துருவல்- ¼ கப்
- ஏலக்காய்- ¼ ஸ்பூன்
- சுக்குத்தூள்- ¼ ஸ்பூன்
- முந்திரி- 10
பயன்படுத்தும் முறை
முதலில் வரகு மற்றும் பாசிப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.
பின்னர் இவற்றை குக்கரில் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துகொள்ளவும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து கரைத்து வெல்லபாகு காய்ச்சிக் கொள்ளவும்.

பின்னர் பாகில் வேக வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக, இது கெட்டியாகி வந்ததும் ஏலக்காய் தூள், சுக்குத்தூள், வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக இதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் போதும் சுவையான வரகு அரிசி உக்காரை ரெடி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |