வரலட்சுமி விரதம் இருக்கும் முறைகள்! அதற்கான பலன்கள்
வரலட்சுமி விரதம் நம் வாழ்க்கையில் அமைதி , செழிப்பு மற்றும் நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
திருமணமான பெண்கள் வரலட்சுமி விரதத்தில் அதிகம் ஈடுபடுகிறார்கள்.அதன்படி 2023 ஆண்டிற்கான வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வரலட்சுமி என்றால் வரம் தரும் தெய்வம் என்று பொருள்.
ஆடி மாதத்தில் பவுர்ணமி அல்லது பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.
வரலட்சுமி விரத நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது செல்வம், பூமி, அன்பு, புகழ், அமைதி, இன்பம், வலிமை ஆகிய எட்டு தெய்வங்களான அஷ்டலட்சுமியை வழிபடுவதற்கு சமம்.வரலட்சுமி பூஜையின் முக்கியத்துவம் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
விரதம் இருக்கும் முறை
விரதமன்று வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு மாவிலை மற்றும் கோலங்களில் வீட்டை அலங்கரிக்க வேண்டும்.
லட்சுமி தேவியின் சிலைகளை அலங்கரிக்கப்பட்டு ,பின் ஸ்லோகங்களை வாசிக்க வேண்டும்.
அரிசியை பானையின் கழுத்தில் பாதி நிரப்பப்பட்ட கலசம் , புதிய மாம்பழம் மற்றும் வெற்றிலைகளால் அலங்கரிக்க வேண்டும்.
மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவை தடவப்பட்ட தேங்காயை பூஜையறையில் வைத்து அதில் லட்சுமி தேவி அழைப்பார்கள்.பூஜை முடியும் வரை பெண்கள் விரதம் இருப்பார்கள்.
பூஜை நாட்களில் வடை, மாங்காய் சாதம், பருப்பு வடை போன்ற சிறப்பு உணவுகளும், பாயசம் போன்ற இனிப்புகளும் தயாரிக்கப்படும்.
வளையல், குங்குமம், வெற்றிலை, பழங்கள், பூக்கள் போன்ற பூஜைக்கு படைத்த பொருட்களை அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களிடம் பரிமாறிக் கொள்வார்கள்.
வர மஹாலட்சுமி பூஜை அன்று , தொழில் தொடங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும், வாஸ்து செய்வதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
உண்டாகும் பலன்கள்
வரலட்சுமி விரதம் இருப்பதினால் , ஆரோக்கியம் ,செல்வ வளம் ,ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.
தீமைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் செழிக்கும். தொழில் முடக்கம், பணப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
மன அமைதி கிடைக்கும் , நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். இத்தகைய சிறப்புமிக்க வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |