பிரித்தானியாவில் கொரோனாவின் 3வது அலை தொடக்கமாகத் தெரிகிறது! பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை
இந்திய மாறுபாடு ஹாட்ஸ்பாட்கள் பிரித்தானியாவில் கொரோனாவின் 3வது அலை தொடக்கமாகத் தெரிகிறது என அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானியும் பேராசிரியருமான Andrew Hayward எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவிலல் இந்தியாவில் முதல் கண்டறியப்பட்ட B1.617.2 என்ற கொரோனா மாறுபாட்டின் பரவல் குறித்து தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் Andrew Hayward கூறினார்.
மேலும், இந்திய மாறுபாடு பரவலை தடுக்க மேலும் பொதுவான நடவடிக்கைகள் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகளுக்குள்ளும், பரந்த சமூகத்திலும் இந்த மாறுபாடு மிகவும் தீவிரமாக பரவியுள்ளதுடன், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
இந்திய மாறுபாடு பரவுவதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், ஆனால் அதைக் கட்டுப்படுத்த இன்னும் பொதுவான நடவடிக்கைகள் தேவைப்படலாம் என பேராசிரியர் Andrew Hayward கூறினார்.
அடுத்த வாரம் உள்ளூர் பரவல்கள் முழு மக்கள்தொகையிலும் எவ்வளவு பரவுகின்றன என்பது தெளிவாகிவிடும்.
மூன்றாவது அலைக்கு வாய்ப்புள்ளது, ஆனால் மாறுபாடு எவ்வளவு பரவக்கூடியது மற்றும் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பதைப் பொறுத்து 3வது அலையின் தாக்கம் இருக்கும் என பேராசிரியர் Andrew Hayward கூறினார்.