பணமாலை, ராணுவ உடை, இறுதி ஊர்வலம்.., சுயேட்சை வேட்பாளர்களின் பல்வேறு வேடங்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு செயல்களை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயேட்சை வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடையவுள்ளது.
இந்த தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது. அதேபோல, பாஜகவும் தேர்தலை புறக்கணித்துள்ளது.
இந்நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் விதவிதமான வேடங்களில் வரத் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர்முகமது என்பவர் இறுதி ஊர்வலத்தின்போது பயன்படுத்தும் சட்டி மற்றும் மணி, பால் பாக்கெட் ஆகியவற்றுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அடுத்ததாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மதுர விநாயகம் என்பவர் ராணுவ உடையில் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மேலும், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவருமான அக்னி ஆழ்வார் என்பவர் கழுத்தில் பணமாலையை அணிந்து கொண்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதோடு, கட்டுத்தொகைக்காக நாணயங்களை எடுத்து வந்து அதிகாரிகளிடம் கொடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |