20 ஆண்டுகால சட்டப் போராட்டம்: கணவரிடம் இருந்து ரூ.85 கோடி இழப்பீடாக பெற்ற இந்திய பெண்
20 ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் விளைவாக வர்ஷா கோஹில் தனக்கான ரூ.85 கோடி இழப்பீட்டை பெற்றுள்ளார்.
வர்ஷா கோஹில் விவாகரத்து
இந்திய வம்சாவளியை சேர்ந்த வர்ஷா கோஹில் கடந்த 2002ம் ஆண்டு தன்னுடைய கணவர் பத்ரேஷ் கோஹிலிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இருவருக்கும் 3 குழந்தைகள் இருந்த நிலையில், அப்போதைய நிதி ஆதாரங்களின் அடிப்படையில் வர்ஷா கோஹிலுக்கு சுமார் 2,70,000 பவுண்டுகள்(ரூ.3.5 கோடி) மற்றும் ஒரு கார் இழப்பீடாக வழங்கப்பட்டது.
இருப்பினும் தன்னுடைய கணவர் அவருடைய சொத்து விவரங்களை முறையாக கணக்கில் காட்டவில்லை என வாதிட்டு வந்தார்.

பண மோசடி வழக்கில் சிக்கிய பத்ரேஷ்
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு பத்ரேஷ் கோஹில் நைஜீரிய முன்னாள் ஆளுநர் ஜேம்ஸ் இபோரியின் கூட்டாளிகள் தொடர்பான பண மோசடி விவகாரத்தில் பத்ரேஷ் முக்கிய குற்றவாளியாக சிக்கினார்.
ஆவணங்கள் திருத்தம், பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பத்ரேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்ந்த சட்ட போராட்டம்
பண மோசடி விவகாரத்திற்கு பிறகு கணவர் பத்ரேஷ் மறைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வெளிச்சத்துக்கு வந்தது.
இறுதியில் உயர் நீதிமன்ற நீதிபதி வில்லியம்ஸ் பத்ரேஷின் சிக்கலான சொத்து விவரங்களை ஆய்வு செய்து, திருமண உறவில் இருந்து பிரிந்த அவரது மனைவி வர்ஷாவிற்கு 6.66 மில்லியன் பவுண்டுகள்(ரூ.85 கோடி ) மதிப்புள்ள சட்டப்பூர்வமான சொத்துகளை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |