RCB தரமான அணி.,ஆனால் கோஹ்லிக்கு எதிராக திட்டம் உள்ளது: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்கரவர்த்தி, இன்றையப் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக பலமாக தயாராகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
RCB vs KKR
ஐபிஎல் 2025 சீஸனின் முதல் போட்டி இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி RCB அணிக்கு எதிராக திட்டங்கள் வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாக்க நாங்கள் முயற்சிப்போம்
அவர் கூறுகையில், "RCB ஒரு தரமான அணி, ஆனால் நாங்கள் எங்கள் ஹோம்ஒர்க்கை செய்துள்ளோம். எங்கள் சாம்பியன் டைட்டிலை பாதுகாக்க நாங்கள் முயற்சிப்போம். எங்களிடம் ஒரு சிறந்த அணி மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் உள்ளனர்.
குயின்டன் டி காக், அன்ரிச் நார்ட்ஜே, ஸ்பென்சர் ஜான்சன், மொயீன் அலி மற்றும் ரோமன் பவல் ஆகியோரை நாங்கள் சேர்ந்துள்ளோம், இந்த முறை எங்களுக்கு ஒரு சிறந்த சர்வதேச மையம் உள்ளது. கடந்த ஆண்டு நீங்கள் பார்த்திருந்தால், சில போட்டிகளில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளும், மிகப்பெரிய தோல்விகளும் இருந்தன.
ஐபிஎல்லில் ஒவ்வொரு போட்டியும் வித்தியாசமானது. நிபுணர்கள் கூறுவதுபோல், நீங்கள் இதை ஒரு புதிய போட்டியாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் விராட் கோஹ்லிக்கு எதிரான தங்களுக்கு சாதகமான போட்டியாக இது இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |