இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட தமிழக வீரர்! இனி அவ்வளவு தானா?
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி நியூலாந்துக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படாத நிலையில் அவர் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறிய நிலையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட அணி பிசிசிஐ சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 17ஆம் திகதி துவங்கும் இந்த டி20 தொடருக்கான அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் வருண் சக்கரவர்த்தி பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மோசமான செயல் பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இருந்து அவர் கழட்டி விடப்பட்டுள்ளதால் இனி அவர் இந்திய அணிக்கு தேர்வாவது கடினம் என்று கூறப்படுகிறது.