அச்சுறுத்தல் வீரரின் விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் வருண்: சூடுபிடித்த அரையிறுதிப் போட்டி
துபாயில் தொடங்கியுள்ள அரையிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டம் எடுத்து ஆடி வருகிறது.
டிராவிஸ் ஹெட்
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதிப் போட்டி துபாயில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஷமியின் பந்துவீச்சில் கோனொலி டக் அவுட் ஆனார். மறுபுறம் டிராவிஸ் ஹெட் (Travis Head) அதிரடியில் மிரட்டினார்.
The big wicket of Travis Head ☝️pic.twitter.com/FsKEdqOopr
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 4, 2025
எனினும் அணியின் ஸ்கோர் 54 ஆக உயர்ந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஹெட் ஆட்டமிழந்தார். அவர் 33 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
லபுஷேன் அவுட்
அச்சுறுத்தல் வீரரான ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமான விடயமாகும்.
அதனைத் தொடர்ந்து, மார்னஸ் லபுஷேன் 29 (36) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா ஓவரில் lbw ஆனார்.
அவுஸ்திரேலிய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 113 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 37 (58) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |