கிராமி விருதுக்கு முதல்முறையாக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் பாடல்
Varuvaaiy first tamil song nominated for grammy award: இசைத் துறையில் உயரிய விருதான கிராமி விருதுக்கு முதல்முறையாக, பாடகரும் இசையமைப்பாளருமான, தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுபிக்ஷா ரங்கராஜன் இணைந்து உருவாக்கிய 'வருவாய்' என்ற பாரதியார் பற்றிய தமிழ்ப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கிராமி விருதுக்கு தமிழ் பாடல் பரிந்துரை
கிராமி விருது, இசைத் துறையில் உயரிய விருதாக கருதப்படுகிறது. 68வது கிராமி விருது 2027 பிப்ரவரி 7 ஆம் திகதியன்று லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற உள்ளது.

இந்த விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் நவம்பர் 16 ஆம் திகதி வெளியானது. இதில் முதல்முறையாக தமிழ் பாடல் ஒன்று இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
பாடகரும் இசையமைப்பாளருமான, தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுபிக்ஷா ரங்கராஜன் இணைந்து உருவாக்கிய 'வருவாய்' என்ற பாரதியார் பற்றிய தமிழ்ப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 2027 ஆம் ஆண்டு நடைபெறும் இந்த விருது விழாவில் இந்தியாவின் ஒரே பரிந்துரையாக இது அமைந்துள்ளது.
ஷகிரா, பாரெல் வில்லியம்ஸ் உள்ளிட்ட உலக ஜாம்பவான்களுடன் இந்த பாடல் போட்டியிட உள்ளது.
இது தொடர்பாக தேவன் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது நான் உணரும் அளவற்ற மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை!!!
ஏஞ்சலிக் கிட்ஜோ, ஃபாரெல் வில்லியம்ஸ், ஷகிரா மற்றும் பர்னா பாய் போன்ற ஜாம்பவான்களுடன் எனது முதல் கிராமி பரிந்துரையைப் பெறுவது நம்ப முடியாததாக இருக்கிறது.
இன்று தமிழ், பாரதியார் மற்றும் கர்நாடக இசைக்கு ஒரு மிகச் சிறப்பான நாள். நான் 1998 முதல் சுயாதீன தமிழ் இசையை உருவாக்கி வருகிறேன், ஒவ்வொரு படைப்பும் என்னை வேறொரு பாதைக்கு இட்டுச் சென்றது, இந்த 29 வருடப் பயணம் மிகவும் நிறைவானதாக இருந்தது.
உங்களில் பலருக்கு என்னை ஒரு பாடராகத் தெரிந்தாலும், எனக்குள் இருக்கும் இசையமைப்பாளர் இது போன்ற ஒரு தருணத்திற்காகப் பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருந்தனர்.
நவம்பர் 16, 2026 இனி ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும், ஏனெனில் அன்றுதான் எனது இசைக்கு அங்கீகாரம் கிடைத்து, நான் அதிகாரப்பூர்வமாக ஒரு கிராமி பரிந்துரையாளராக ஆகியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

பாடகரும் இசையமைப்பாளருமான, தேவன் ஏகாம்பரம் ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ மரியா’, தலைநகரத்தில் இடம்பெற்ற 'ஏனோ நினைக்கிறேன்', விண்ணனைத்தாண்டி வருவாயாவில் 'அன்பில் அவன்' உள்பட ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.