பல கோடி ரூபாய் வணிக சாம்ராஜியத்தை உருவாக்கிய வசந்த் & கோ உரிமையாளர் - சொத்து மதிப்பு?
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான வசந்த் & கோ உரிமையாளர் மறைந்த வசந்த்குமாரின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.
யார் இந்த வசந்த்குமார்?
1950 ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் பிறந்தவர் தான் வசந்த் & கோ உரிமையாளர் வசந்த்குமார். இவர் எந்தவொரு பட்டப்படிப்பும் படிக்கவிலை என்றாலும் இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஓர் பெரும் தொழிலதிபராக வந்தார்.
இதற்கு முக்கிய காரணம் அவருடைய விடாமுயற்சி என்றே கூறலாம். முக்கியமாக இவர் VGP என்ற நிறுவனத்தில் சாதாரண விற்பனையாளராக தான் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் எனலாம்.
ஒரு நாள் 50 பொருட்களை விற்பனை செய்தால் மட்டமே அந்நாளிற்கான உணவு என்ற நிலையில் தான் அவரது வாழ்க்கை இருந்துள்ளது.
அதன்படி அவருடைய முயற்சியால் மல்லிகைகடை ஒன்றும் ஆரம்பித்துள்ளார். ஆனால் அந்த தொழில் அவருக்கு பெருமளவில் விருப்பமான தொழிலாக இருக்கவில்லையாம். எனவே முதலில் அவர் வீடு வீடாக சென்று விற்பனை செய்த வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து தொழில் செய்ய வேண்டும் என எண்ணியுள்ளார்.
அதன்பின்னரே, வசந்த் & கோ என்ற பெயர் வைத்து ஓர் கடையை ஆரம்பித்தார். அதற்கான முதலீடாக அவர் செய்தது வெறும் ரூ.22 என கூறப்படுகிறது.
ஆனால் இப்போது அந்த நிறுவனம் கிட்டத்தட்ட 85 கிளைகளாக விரிவடைந்து, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா என பெரியளவிற்கு சென்றது.
ரூ.22 வைத்து ஆரம்பித்த வசந்த் & கோ
ஆரம்பத்தில் வீட்டு உபயோகப் பொருட்களை எளிய மக்களுக்கு சிறந்த விலையில் வழங்க வேண்டும் என்பது தான் இவருடைய நோக்கமாக இருந்துள்ளது.
அதற்காக முழு பணத்தையும் வழங்கி அவர் பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை எனவும், தவணை முறையில் கட்டலாம் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருந்தார்.
நிறைய மக்களுக்கு அவருடைய பொருட்களை கொண்டு சேர்பதற்கான பல உத்திகளை முயற்சித்துள்ளார். இந்த முறை அந்த நேரத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்துள்ளது என்றே கூறலாம்.
இவ்வாறு இவருடைய தொழில் வளர்ந்துக்கொண்டிருக்கும் போது தான், தெருவோர வியாபாரிகளுக்கு உதவும் விதமாக வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்ற நோக்கில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதையும் வெற்றிகரமாக செய்து வந்தார்.
இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். எனவே மக்கள் சேவையில் இறங்க வேண்டும் என எண்ணி 2006 ஆம் காலக்கட்டத்தில் 'வெற்றிக்கொடிக்கட்டு' என்ற புதத்தகத்தை எழுதி, நடிகர் ரஜினிகாந்த தலைமையில் வெளியிட்டார்.
அதுமட்டுமில்லாமல் 2008 இல் வசந்த் டிவி என்ற ஓர் சேனல் ஆரம்பித்து, பல்சுவை நிகழ்ச்சியையும் மக்களுக்காக வழங்கினார்.
இந்நேரத்தில் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின் 1967 முதல் காங்கிரஸ் ஆட்சிக்கு வராத கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு இருந்தார்.
சொத்து மதிப்பு?
2014 ஆம் ஆண்டு ஆண்டு முதல் தனது தனிப்பட்ட வருமானத்தில் 45 சதவீதம் அதிகரிப்புடன் ரூ.417 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அரசியல் பிரமாணப்பத்திரத்தில் அறிவித்தார்.
வசந்தகுமார் தனது 2013-14 வருமான வரி படிவத்தின் படி, ஆண்டுக்கு ரூ.19.87 கோடி சம்பாதிப்பார். இது கடந்த நிதியாண்டில் ரூ.28.93 கோடியாக உயர்ந்துள்ளது.
வசந்த்குமாருக்கு 337.27 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசையும் சொத்துக்கள் உள்ளன.
அதே சமயம் அவரது அசையா சொத்துகள் சந்தையில் 182 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இதனால் அவரது சொத்து மதிப்பு ரூ.412 கோடியை தாண்டியிருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |