தங்கத்தை வீட்டின் இந்த மூலையில் வைத்தால்... பல்மடங்கு பெருகும்
ஒரு சிலர் வீட்டில் சேர்க்கும் பணம் முதல் தங்கம் வரை அனைத்தும் நிலைத்து இருக்கும். மேலும் வந்துக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஒரு சிலர் வீட்டில் இந்த பொருட்கள் வந்த வழி தெரியாமல் போகும். இதற்கு காரணம் என்று பார்த்தால் வாஸ்து என்று தான் சொல்லலாம்.
ஒரு வீடு கட்டுவதற்கு திசை மற்றும் வாஸ்து பார்த்து கட்டுவதை நினைவில் வைத்திருப்பவர்கள்,
வீட்டில் வைக்கும் தங்கம் மற்றும் பணத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று யோசிப்பது இல்லை. இதுவே இதற்கு ஒரு காரணாக இருகின்றது.
ஆகவே தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்துவோம்.
- தங்க நகைகளை கன்னி மூலையில் வைப்பது நல்லது.
- தென் மேற்கு மூலையில் வடக்கு அல்லது கிழக்கு பார்த்து லாக்கர் அல்லது அலுமாரி வைத்து, அந்த இடத்தில் தங்கம் வைத்தால் வீட்டில் தங்கம் சேரும்.
- ஈசானிய மூலையில் தங்கம் மற்றும் பணம் வைப்பது சிறப்பானதாகும்.
- பூமிக்கடியில் மற்றும் உச்சத்தில் பணத்தை வைப்பது நல்லது.
- வாயு மூலையில் பீரோ அல்லது பணம் வைத்தால் பணம் கையை தாண்டி சென்றுவிடும்.
- வாயு மூளையில் வைக்க வேண்டிய சூல்நிலை இருந்தால், ஒரு துணி வைத்து அந்த இடத்தில் அலுமாரி வைப்பது சிறந்தது.
- மேலும் கடன் பிரச்சினை அதிகரித்து வருகின்றது என்றால், தினமும் மகாலட்சுமி அஷ்டகத்தை படித்து வரலாம்.
- விநாயகரை வழிபட்டு, உங்கள் பெயர், நட்சத்திரம் உச்சரித்து நீங்களே சங்கல்பம் செய்து கொண்டு, இந்த அஷ்டகத்தை தினமும் படித்து வந்தால் கடன் தீரும் மற்றும் பணவரவு அதிகரிக்கும்.
- வடக்கு நோக்கி அமர்ந்து 108 முறை ஓம் மகாலட்சுமியை நமஹ என்ற மந்திரத்தை கூறி வர கடன் பிரச்சினை தீரும்.
குபேரர் வழிபாடு, சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தால் கடன் பிரச்சினை தீர்ந்து, தங்கம் மற்றும் பணத்தின் வரவு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.