வீட்டில் ஊறுகாய் ஜாடியை எந்த இடத்தில் வைக்க வேண்டும்? ஜோதிடர்கள் தரும் விளக்கம் இதுதான்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வாஸ்து வழிகாட்டுதலின்படி வைத்திருப்பதன் மூலம், அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாக நம்பப்படுகிறது.
இதை கடைப்பிடிக்காமல் இருந்தால் வீட்டிற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்த வழிக்காட்டுகிறது. அந்தவகையில் வீட்டில் ஊறுகாய் ஜாடியை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஊறுகாய் ஜாடிகளை எங்கே வைக்க வேண்டும்?
ஊறுகாயை எப்போதும் ஒரு கண்ணாடி குடுவையில் சேமித்து வைப்பது மிகவும் முக்கியம். சாஸ்திரங்களின்படி, ஊறுகாய்களை சேமிக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடி பாத்திரங்கள் தூய்மையானவை என்றும், பிளாஸ்டிக் தூய்மையற்றதாகவும் கருதப்படுகிறது.
வீட்டில் ஊறுகாய்களை தவறான திசையில் வைத்திருந்தால், அது குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் அளவுக்கு உறவுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இது உறவுகளில் விரிசலை உருவாக்கும். ஊறுகாய் ஜாடியை வீட்டின் வடமேற்கு திசையில் மட்டுமே வைக்க வேண்டும் என பல ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
வடக்கு திசையானது புதன் கிரகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், மேற்கு திசையானது சனி கிரகத்திற்குரியது.
வடமேற்கு திசையானது சனி மற்றும் புதனின் கலவையான விளைவை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது.
ஆகவே குடும்பத்தில் இருப்பவர்களும் நீங்களும் சந்தோஷமா வாழ்வதற்கு ஊறுகாய் ஜாடியை வீட்டின் வடமேற்கு திசையில் வைக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |