வாஸ்து: வீட்டில் குளியலறையை இந்த திசையில் கட்டினால் துன்பம் வருமாம்
வீட்டில் சரியான திசையில் கட்டப்படும் அறைகளும் நன்மையையும் செல்ல வளத்தையும் கொடுக்கும்.
வாஸ்துபடி நம்முடைய வீட்டில் எந்த திசையில் குளியலறையை கட்ட வேண்டும் எந்த திசையில் கட்டக்கூடாது என்று பார்க்கலாம்.
வடகிழக்குப் பகுதி இறைவன் வசிக்கும் பகுதி. வடகிழக்கு மூலை பகுதியில் ஒருபோதும் கழிவறை, குளியலறையை கட்டக்கூடாது.
கழிப்பறை, குளியலறையில் வாஸ்து பிரச்னை இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது குடும்ப தலைவன் தான்.
கழிப்பறையிலிருந்து வரக்கூடிய கழிவுநீர் உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறை, சமையலறை, படுக்கை அறைக்கு கீழே கடந்து செல்லாதவாறு அமைக்க வேண்டும்.
வீட்டின் மையத்தில் அல்லது வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் கழிப்பறை வரும் வகையில் வீடு கட்டுவதைத் தவிர்க்கவும்.
வீட்டின் மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் படுக்கை அறை இருந்தால் அங்கு இணைப்பாக குளியலறை, கழிப்பறை கட்டலாம்.
கழிப்பறையில் கோப்பையை வடக்கு தெற்கு திசைகளை நோக்கி வைக்க வேண்டும். கிழக்கு மேற்கு நோக்கி அமரும் வகையில் அமைக்கக்கூடாது.
வாஸ்து படி, சமையலறைக்கு எதிரே அல்லது அதற்கு அடுத்ததாகக் குளியலறை, கழிப்பறை இருக்கக்கூடாது.
குளியலறையில் உள்ள தண்ணீர் வாளி அல்லது தொட்டி எப்போதும் குளியலறையில் நிறைந்திருக்க வேண்டும்.
வாளி காலியாக இருந்தால், அதை கவிழ்த்து வைக்க வேண்டும். இது வீட்டில் மகிழ்ச்சியையும், செல்வ வளத்தையும் கொடுக்கும்.
குளியலறையில் கண்டிப்பாக ஒரு ஜன்னல் கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு நோக்கி திறக்குமாறு இருக்க வேண்டும். இதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வெளியேறுகிறது.
குளியலறை, கழிவறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மகிழ்ச்சியையும் நிதி நிலைமையையும் பாதிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |