வெளிநாடு செல்ல வேண்டுமா? அப்போ இந்த வாஸ்து தவறுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்
வெளிநாடு செல்ல விரும்பினால், சில வாஸ்து தவறுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உங்கள் வெளிநாட்டு பயணத்தில் தடைகளை உருவாக்கும்.
படிப்புக்காகவோ, நல்ல வேலைக்காகவோ அல்லது சில சமயங்களில் விடுமுறைக்காகவோ வெளிநாடு செல்ல வேண்டும் என பலர் நினைப்பார்கள்.
அதற்கான முழு ஆயத்தங்களையும் செய்து, தங்கள் கனவு நிறைவேறும் என்று நினைக்கும் போது, ஏதாவது தடைகள் ஏற்படும்.
இந்த தடையானது சில வாஸ்து தவறுகளாளும் நிகழும். பல வாஸ்து தவறுகள் உங்கள் வெளிநாட்டு பயணத்தில் தடைகளை உருவாக்கலாம்.
எனவே, தவிர்க்க வேண்டிய சில வாஸ்து தவறுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- முக்கியமான ஆவணங்கள், விசாக்கள் அல்லது சான்றிதழ்கள் போன்ற பயணம் தொடர்பான ஆவணங்களை தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கக்கூடாது.
- வெளிநாடு செல்வது தொடர்பான ஆவணங்களை ஒரே இடத்தில் வைத்திருப்பதும், தேவைப்படும் வரை அலமாரியில் இருந்து வெளியே எடுக்காமல் இருப்பதும் வழக்கம். இதை செய்யவே கூடாது. 10-15 நாட்களுக்கு ஒருமுறை அந்த ஆவணங்களை எடுத்து ஒருமுறை படிக்கவும்.
- வெளிநாடு செல்வது தொடர்பான ஆவணங்களுடன் நீதிமன்ற வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒன்றாக வைத்திருக்க கூடாது.
- செல்லவிருக்கும் நாட்டின் பணத்தை தென்மேற்கு திசையில் வைத்திருக்கலாம்.
வெளிநாட்டிற்கு செல்லும் ஆசை இருந்தால். இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம் என பல வாஸ்த்து அறிஞர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |