செல்வம் பெருகி கடன் தொல்லை நீங்க வீட்டில் மணி பிளான்ட்டை இந்த திசையில் வையுங்கள்
மணி பிளான்ட் தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும்.
பொதுவாக, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்பது ஒரு நம்பிக்கை.
இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என்ற நம்பிக்கை நம் அனைவரது மத்தியில் இருந்து வருகிறது.
உங்களிடம் மணி பிளான்ட் செடி இருந்தால், காய்ந்த இலைகளை உடனடியாக துண்டித்து, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
மணி பிளான்ட் செடி மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும்.
மணி பிளான்ட்டை விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப வீடு மற்றும் அலுவலகத்திலும் வைக்கலாம்.
வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை கிழக்கு திசையில் நட வேண்டும் என்கிறார்கள்.
உங்கள் படுக்கையறையை அலங்கரிக்கவும் அழகுபடுத்தவும் மணி பிளான்ட் செடியை வைத்துக்கொள்ளலாம்.
வீட்டில் மணி பிளான் செடியை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |