வாஸ்து: வீட்டின் கதவை இப்படி வைத்திருந்தால் வறுமை உண்டாகுமாம்
ஜோதிடத்தின்படி, ஒரு கட்டடத்தைக் கட்டமைக்கும் போதும் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமாகும்.
வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும்.
அந்தவகையில், வீட்டில் வறுமை உண்டாகாமல் இருக்க வீட்டின் கதவை இந்த இடத்தில வைக்காதீர்கள்.
அதன்படி வீட்டின் முதன்மையானதாக கருதப்படும் நிலப்படி கதவு சொல்லும் வாஸ்துவை தெரிந்து கொள்ளலாம்.
வீட்டின் கதவு நன்றாக இருந்தாலே எதிர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையாது என சொல்லப்படுகிறது. இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டால், வீட்டின் பிரதான கதவில் பூக்களை வைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
வீட்டின் பிரதான கதவில் மா இலை தொங்கவிடுவது வீட்டிற்கு நல்லதாகும். கதவில் கடவுள் புகைப்படம் பொறிப்பது, ஒட்டுவது சிறந்ததாகும்.
வீட்டின் கதவு ஈயத்தாலோ, வேம்பு, சந்தனம் உள்ளிட்ட மரங்களில் தயாரிக்கப்பட்டதே சுபமாக கருதப்படுகிறது.
எப்போது வீட்டிற்கு வந்தாலும் இரு கைகளாலேயே கதவை திறக்க வேண்டுமாம். வீட்டின் கதவை எப்போதும் திறந்துவைத்தால் செல்வம் அழிந்துவிடுமாம்.
காலை சில மணி நேரம், மாலை சில மணி நேரம் மட்டுமே திறந்து வைக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.
வீட்டின் கதவில் சத்தம் வரக்கூடாது. சரி இல்லாத கதவுகளை உடனடியாக மாற்றி விட வேண்டும். வீட்டின் கதவை லட்சுமி வாசம் செய்வதால் தினமும் கதவை துடைத்து வைப்பது நல்லதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |