வீட்டில் செல்வம் கொழிக்க சமையலறை வாஸ்து டிப்ஸ்
லட்சங்களில் செலவு செய்து வீடு கட்டினாலும் வாஸ்து சாஸ்திரப்படி இல்லையென்றால் கஷ்டங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
எனவே வீடு கட்டும் போதே அல்லது வாஸ்து முறைகளை பின்பற்றி மாற்றங்களை செய்தால் செல்வம் அதிகரிக்கும், இது குறித்து மேலும் தெரிந்து கொள்வோம்.
செய்ய வேண்டியவை
வடமேற்கு திசையில் சமையலறையை வடிவமைத்து, அடுப்பை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
சமையலறை கதவுகள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும், ஜன்னல்கள் மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.
அடுப்பை பற்றவைக்கும் போது கிழக்கு நோக்கி நிற்க வேண்டும், சூரியன் கிழக்கு திசையில் உதிப்பதால் கிழக்கு திசை செழிப்பை தரும்.
தென்கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு திசை நோக்கி குளிர்சாதன பெட்டியை வைக்கலாம்.
செய்யக்கூடாதவை
வீட்டு பூஜை அறையின் முன் சமையல் அறையை வைக்கக்கூடாது, கழிப்பறைக்கு அருகேயும் சமையலறை வைக்கக்கூடாது.
வடக்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி சமையலறை வைக்கக்கூடாது.