வீட்டில் வாழை மரம் இருக்கா? கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே இந்து வீடுகளில் இருப்பவர்கள் கல்யாணம், காதுகுத்து என ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் வாழை மரம் முதல் இலை வரை பயன்படுத்துவார்கள்.
ஏனென்றால் இது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. ஒருவரை ஆசிர்வதிக்க வேண்டுமென்றார் பலரும் வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கட்டும் என வாழ்த்துவார்கள்.
அதற்கான காரணம் பற்றி எப்போதாவது யோசித்து இருக்கீங்களா? ஏனென்றால், வாழை மரத்திற்கு அவ்வளவு சிறப்பு.
ஆன்மீக ரீதியில் மட்டுமில்லாமல் அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்து இருகிறது எனலாம்.
பலரது வீட்டில் வாழை மரமானது வளர்க்கப்படுகிறது. அதை வளர்த்தால் மட்டும் போதாது. வாழை மரத்திற்கு என தனிப்பட்ட சில விதிகள் உள்ளது. அதையும் சீராக கடைப்பிடிக்க வேண்டும்.
அது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வீட்டில் வளர்க்கும் வாழைமரம்
- வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வாழை மரத்தை தென்கிழக்கு, தெற்கு அல்லது மேற்கு திசையில் நட்டுவைக்கக் கூடாது.
- வீட்டின் வடகிழக்கு பகுதியில் வாழைமரம் இருப்பது மிகவும் நல்லது.
- வீட்டின் நுழைவாயிலை வாழைமரம் மறைக்காமல் வளர்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால் வீட்டிற்கு வரும் மங்கள சக்திகள் தடுக்கப்படும்.
- வாழைமரம் இருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- இது வியாழன் மற்றும் விஷ்ணு கிரகத்தின் ஆசீர்வாதத்தில் வளர்வதாக நம்பிக்கை ஒன்றும் உள்ளது.
- வியாழக் கிழமைகளில் காலையில் நீராடி மஞ்சள் வஸ்திரம் அணிந்து வாழை மரத்தை வணங்க வேண்டும். பின் நெய் தீபம் காட்டி 9 முறை சுற்றி வரவும்.
- வாழைமரம் வீட்டில் இருந்தால் குரு தோஷம் நீங்கும்.
- திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
- மரத்தை சீராக பராமரிக்கவில்லை என்றால், அது குடும்பத்திற்கு அசுபமாகவும், நஷ்டமாகவும் மாறும்.
-
வாழைக்கு அழுக்குத் தண்ணீரை ஊற்றாதீர்கள்.
- மரத்தை சனி, செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் வெட்டக்கூடாது.
-
பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் வாழை மரங்களை வெட்டக்கூடாது.
இந்த முறைகளின் படி வாழைமரத்தை வளர்த்து வருவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி மற்றும் செல்வம் ஆகியவை அள்ளிக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |