வாஸ்து: வீட்டின் வாசலில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை வருமாம்
வீட்டு நுழைவு வாயிலிலும் சில வாஸ்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
வீட்டின் முன் சில பொருட்கள் இருந்தால், அது வறுமையைத் தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
வீடுகளின் முன் குப்பைகளை சேகரித்து அல்லது வீட்டின் முன் குப்பை கொட்டுவது வறுமையின் அடையாளம் எனக் கூறப்படுகிறது.
வாசலுக்கு அருகில் குப்பைகள் வைக்கப்படும் வீடுகளில் லட்சுமி தேவி குடியிருப்பதில்லை. இதனால் வீட்டில் அமைதியின்மை, நோய்கள், செல்வ இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வீட்டின் பிரதான நுழைவாயில் எப்போதும் வீட்டின் முன்னிருக்கும் சாலையை விட உயரமாக இருக்க வேண்டும்.
வீட்டின் வாயில் சாலைக்கு கீழே இருந்தால், எதிர்மறை ஆற்றலின் தாக்கம் வீட்டினுள் இருக்கும். அத்தகைய வீடுகளில் எப்போதும் நோய்களும் சண்டைகளும் இருந்து கொண்டே இருக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு நேராக முள் மரங்களை நடக்கூடாது. முள் செடிகள் உள்ள வீடுகளில் மகிழ்ச்சியும் வளமும் நிலைப்பதில்லை என்பது ஐதீகம்.
வீட்டின் வெளியே கிடக்கும் கற்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. எனவே, வீட்டிற்கு வெளியே கற்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
வீட்டின் முன் அழுக்கு நீர் தேங்கினால் எதிர்மறை தன்மை அதிகரிக்கிறது. எனவே வீட்டிற்கு வெளியே அழுக்கு நீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.
மேலு, வீட்டின் முன் மின்கம்பம் இருக்கக் கூடாது. வீட்டின் முன் மின்கம்பம் இருந்தால், வீட்டில் இருப்பவர்களுக்கு இடையே எப்போதும் சண்டை, வாக்குவாதம் ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |