உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுடன் அவுஸ்திரேலியர்கள் விளையாட மாட்டார்களா? முன்னாள் வீரர் சரமாரி கேள்வி
ஆப்கானிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்த அவுஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருநாள் தொடரை மறுத்த அவுஸ்திரேலியா
தலிபான் அரசு ஆட்சியில் பெண்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்படுவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி விளையாட இருந்தது.
ஆனால், பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் தலிபான் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அவுஸ்திரேலியா அறிவித்தது.
அத்துடன், நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மேம்பட்ட நிலைமைகளை எதிர்பார்த்து நாங்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம் என்றும் கூறியது.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வெளியேறுவதாக அறிவித்தார்.
@Getty Images: Pradeep Dambarage/NurPhoto
மைக்கேல் வாகன் கேள்வி
இது கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், 'இந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுடன் விளையாட அவுஸ்திரேலியர்கள் மறுப்பார்களா? சில மாதங்களுக்கு முன்பு ஆடவர் டி20 உலகக்கோப்பையில் அவர்கள் விளையாடவில்லையா!?????' என கூறியுள்ளார்.
அடிலெய்டில் நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
@Reuters